கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடிய விரைவில் தவெக கூட்டணியில் இணைவார்கள் என அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா பனையூரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்; மதச்சார்பின்மையும் சமூகநீதியும் நிலைநாட்டப்படும் இடத்திலேயே அவர்களின் மனம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தவெகவின் கூட்டணி பெயர் நேர்த்தியாக இருப்பதாகக் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) வீரப்பாண்டியன், தற்போதைய சூழலில் கூட்டணி அமைப்பது அவசியம் இல்லை என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்றும், இருப்பினும் தவெகவுக்கான தங்களின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
