5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த வடிவேலு… சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்..!

By Soundarya on மார்கழி 6, 2024

Spread the love

தன்னைக் குறித்து சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என்ற சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரம்ப காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் படங்களில் இணைந்து நடிப்பதை கூட முற்றிலுமாக நிறுத்தி விட்டார்கள்.

உயர்நீதிமன்றத்தில் வடிவேலுவுடன் செல்பி எடுத்த வழக்கறிஞர்கள் | Vadivelu and Singamuthu appeared in Chennai HC - Vikatan

   

ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது வெளியே தெரிய காரணமே சிங்கமுத்து பல பேட்டிகளில் வடிவேல் குறித்து அவதூராக பேசியதுதான். குறிப்பாக ஒரு பேட்டியில் கூட பொதுவாகவே வடிவேலு ஒரு படத்தில் என்னோடு தன்னோடு நடித்து யாராவது ஒரு பிரபலமான நடிகராகிவிட்டார் என்றால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது என்றால் அவர்களை அழித்துவிடுவார். தன்னைவிட சிறப்பாக நடிக்கிறார் என பெயர் எடுத்து விட்டால் அவர்களைப் பற்றி பொதுவெளியில் நம்பும் வகையில் பொய் சொல்லி அவர்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்தி விடுவார் என்று பேசி இருந்தார் .

   

 

இப்படி சிங்கமுத்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால் தான் வடிவேலு மீது அந்த சமயங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதனை அடுத்து இந்த பிரச்சினையை சும்மா விட்டால் சரியாக இருக்காது என்று முடிவெடுத்து சிங்கமுத்து தன்னை பற்றி பொது வெளியில் பல பொய்களை கூறியது மட்டும் இல்லாமல் தன்னை தரக்குறைவாகவும் பேசி இருக்கிறார் என்றும் இதனால் ஐந்து கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு.

ரூ. 5 கோடி நஷ்ட ஈடு: நடிகர் வடிவேலு வழக்கில் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு! | Rs. 5 crore as compensation; Actor Vadivelu's case against Singamuthu - kamadenu tamil

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இனிமேல் நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க கூடாது என்று சிங்கமுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாத தாக்கல் செய்யவும் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.