தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்து.வந்தது. இந்த நிலையில் படம் டிசம்பர் 15 ம் தேதியான இன்று ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்தது.

இந்நிலையில் இன்று ரிலீஸாக இருந்த 8 திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தங்களுக்குத் தரவேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு தற்பொழுது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் இன்று ரிலீஸாகவில்லை. ஏற்கெனவே பல பிரச்சனைகளை கடந்து முன்னேறி வரும் சிவகார்த்திகேயனுக்கு இது சோதனை காலம் என்று தான் கூற வேண்டும். அயலான் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மொத்தத்தில் இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
