ஐயோ கடவுளே… குடிபோதையில் பறந்த ஃபார்ச்சூனர் காரால்… நடுரோட்டில் கவிழ்ந்த ஐ10 கார்… மின்கம்பம் சாய்ந்து தம்பதி படுகாயம்… நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

ஹைதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்பசாடிகுடா அருகே இன்று காலை 6.30 மணியளவில் அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், எதிர்பாராதவிதமாக ஹூண்டாய் ஐ10 கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஐ10 கார் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், ஃபார்ச்சூனர் காரும் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

காரின் மீது மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஃபார்ச்சூனர் காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்தாரா, போலி வாகனப் பதிவு எண் பயன்படுத்தப்பட்டதா மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.