குருகிராமில் ஆட்டோ ஓட்டுநருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே கட்டணத் தகராறு முற்றியதில், வன்முறை வெடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அற்பமான ஒரு காரணத்திற்காகத் தொடங்கிய வாக்குவாதம், எல்லை மீறி கைகலப்பாக மாறியது பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்தடுமாறி நின்ற அந்தப் பெண்ணைத் தடியால் சரமாரியாகவும் கொடூரமாகவும் தாக்கியுள்ளார். இந்த வெறிச்செயல் அங்கிருந்தவர்களைப் பதறச் செய்ததுடன், பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான அச்சத்தையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.
https://twitter.com/ManojSh28986262/status/2113516345044467798/video/1
சட்டம் மற்றும் ஒழுங்கின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சம்பவம் குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இத்தகைய ஆதிக்க மனப்பான்மையும் வன்முறைச் செயல்களும் மீண்டும் நிகழாமல் இருக்கத் தீவிரமான சட்ட நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.
