“மகனே நீ இல்லாத உலகம் எமக்கு எதற்கு?”… ஒரே சேலையில் உயிரை விட்ட தம்பதி… வீட்டின் முன் நடந்த நெஞ்சை உறையவைக்கும் துயரம்….!

Spread the love

மகனை இழந்த துயரம் தாளாமல் சத்தீஸ்கர் மாநிலத்தில் தம்பதியினர் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் உள்ள தார்தேயி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கிருஷ்ண பட்டேல் மற்றும் அவரது மனைவி ரமா பாய் ஆகியோரே இவ்வாறு தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஆவர். இவர்களுக்கு ஆதித்யா பட்டேல் என்ற 21 வயது மகன் இருந்த நிலையில், அவரே இவர்களது ஒட்டுமொத்த உலகமாகத் திகழ்ந்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கோர சாலை விபத்தில் இவர்களது ஒரே மகன் ஆதித்யா துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். மகனின் மறைவு அந்தத் தம்பதியினரை மீளாத் துயரத்திலும், கடும் மன உளைச்சலிலும் ஆழ்த்தியது. மகனைப் பிரிந்து வாழ முடியாமல் தவித்த அவர்கள், ஒவ்வொரு நாளையும் கண்ணீருடனே கடந்து வந்துள்ளனர். மகனின் நினைவுகள் அவர்களைத் தூங்க விடாமல் வாட்டியெடுத்த நிலையில், இறுதியாகத் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.

நேற்று அதிகாலை வேளையில், தங்களது வீட்டின் முன்புறம் உள்ள ஒரு மரத்தில் கணவனும் மனைவியும் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக்கு முன்பாக அவர்கள் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு உருக்கமான கடிதத்தையும், ஒரு வீடியோ செய்தியையும் விட்டுச் சென்றுள்ளனர். அதில், “எங்கள் வாழ்வின் அஸ்திவாரமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தவன் ஆதித்யா. அவன் இல்லாத இந்த வீடு எங்களுக்கு நரகமாகத் தெரிகிறது, அவனில்லாமல் எங்களால் உயிர் வாழ முடியவில்லை” என்று தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடுத்தடுத்து மரணமடைந்த நிகழ்வு அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் தம்பதியினர் மேற்கொண்ட இந்த விபரீத முடிவு, சமூக வலைதளங்களில் பலரது இதயங்களையும் கணக்கச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

8 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

14 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

25 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

26 minutes ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

29 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

32 minutes ago