Categories: சினிமா

கடத்தல் மன்னன் கேரக்டரில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த படம்… ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு… – உற்சாகத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்!

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி வளரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவர் நடித்த சில படங்கள் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தந்தன. அதில் ஒரு படம் தான் சூது கவ்வும். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த இந்த படம் கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சஞ்சிதா ஷெட்டி அசோக் செல்வன் ரமேஷ் திலக் கருணாகரன் பாபி சிம்ஹா எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ஆள் கடத்தல் கும்பல் கதைக்களத்தில் காமெடியான பாணியில் இந்த படம் இருந்தது. இதில் வந்த டார்க் காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படம் கல்ட் கிளாசிக் படமாகவும் மாறியது. இதைத் தொடர்ந்து சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களுக்கும் என்ற 2ம் பாகம் படம் கடந்த 2024ம் ஆண்டு எம்எஸ் அர்ஜூன் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படங்கள் தற்போது வரிசையில் வருவதால் சூது கவ்வும் முதல் பாகம் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. வருகிற 20-ஆம் தேதி சூது கவ்வும் படம் ரி ரீலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்துக்கான டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Elango

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

9 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

9 மணத்தியாலங்கள் ago