நாட்டையே உலுக்கும் கொடூரம்… தம்பதியை உயிரோடு எரித்து கொலை செய்த கிராம மக்கள்… அதிர்ச்சி தரும் காரணம்…!

By Nanthini on தை 1, 2026

Spread the love

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த கார்டி பிருவா (43) என்பவருடைய மனைவி மிரா (33). இவர்கள் இருவரும் ஆஞ்சியோ உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனிடையே நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். பிறகு அவரையும் அவருடைய மனைவியையும் வீட்டு வாசலில் வைத்து கடுமையாக தாக்கிய ஊர் மக்கள் அவர்கள் மீது தீயை வைத்து கொளுத்தியுள்ளனர்.

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எரிந்து சாம்பலான தம்பதியினரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அங்கிருந்து கொலைக்கான தடயங்களை சேகரித்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.