“அவசரமா ஆஸ்பத்திரி போகணும்” பணம் கொடுங்க ஜி-பே பண்ணுறேன்… நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதி கைது..!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. டெக்னாலஜி வளர வளர மோசடிகளும் அதிகரித்து வருகிறது. செல்போனுக்கு ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி  வைக்கிறார்கள் மோசடி கும்பல். அதை தெரியாமல் தொட்டவுடன் பணம் பறிபோய் விடுகிறது. ஒரு சிலரோ  வங்கியில் இருந்து பேசுகிறோம் OTP நம்பர் சொல்லுங்கள் என்று கூறி அப்படியும் பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். இது குறித்து வங்கிகளும், அரசும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தும் ஒரு சில மோசடிகள் இன்னும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் கோவையில் நூதன முறையில் காதல் தம்பதிகள் மோசடி  செய்துள்ளார்கள் . அதாவது பணத்தை வாங்கிக் கொண்டு ஜீபே மூலம் பணத்தை செலுத்துவதாக கூறி 112 பேரிடம் இவர்கள் சிறு சிறு தொகையாக சுமார் 2 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார்கள். மருத்துவமனை செல்வதற்கு அவசரமாக ரூபாய் நோட்டாக தேவை. அதை ஜிபே மூலமாக செலுத்தி விடுகிறோம் என்று கூறி பணத்தை அனுப்பியது போல போலியான ஸ்கிரீன்ஷாட் காட்டி தப்பித்து வந்துள்ளார்கள் இந்த ஜோடி. இதனையடுத்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் அளித்த புகாரியின் அடிப்படையில் தற்போது கைதாகி உள்ளார்கள்.