தோழி கெனிஷாவுடன் சேர்ந்து பார்ட்டி கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Nanthini on ஆனி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ரவி மோகன். சமீபத்தில் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். சமீபகாலமாக தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் ஆன விவாகரத்து பிரச்சனை தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

   

இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் தனது மனைவியை பிரிய போவதாக ரவி மோகன் அறிவித்தார். அப்போதிலிருந்து ஆர்த்தி தரப்பிலிருந்தும் ரவி மோகன் தரத்தில் இருந்தும் மாறி மாறி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

   

 

காலப்போக்கில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி அறிக்கைகளில் அவதூறு கருத்துக்களையும் பரப்பி வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க ரவி மோகனின் சினிமா வாழ்க்கையை பொருத்தவரையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார்.

இதனிடையே ரவி மோகன் தற்போது எங்கு சென்றாலும் தனது தோழியும் பாடகியுமான கெனிஷா உடன் தான் சென்று கொண்டிருக்கின்றார். இவர்களுடைய நட்பு முதலில் தவறாக சித்தரிக்கப்பட்ட நிலையில் காலப்போக்கில் அப்படியே நல்ல விதமாக பேச தொடங்கி விட்டனர்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம் இருக்க, ஜெயம் ரவி அவரது தோழி கெனிஷா உடன் தான் ஜோடியாக எங்கும் செல்கிறார்.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்டி ஒன்றை கொடுத்து இருக்கின்றனர். கெனிஷா இசையமைத்து பாடி இருந்த ‘அன்றும் இன்றும்’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்காக தான் ஜெயம் ரவி – கெனிஷா ஜோடி பார்ட்டி ஒன்றை கொடுத்து இருக்கின்றனர்.

Ravi Mohan

அதில் சுதா கொங்கரா, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.