“ஐயோ… காப்பாத்துங்க”… கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்த கார்… தம்பதி, 2 பிஞ்சுக் குழந்தைகள்… நீரில் மூழ்கி துடிதுடித்து பலி… தெலங்கானாவில் சோகம்…!

By Swetha on ஆவணி 21, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் துப்பாக் மண்டலம் அப்பனபள்ளி கிராமம் அருகே, புதன்கிழமை நள்ளிரவு ஒரு காரானது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த திறந்தவெளி விவசாயக் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணப்பயணம் செய்த பலவந்தபூரைச் சேர்ந்த டி. ராஜ் (35), அவரது மனைவி பாக்யா (22) மற்றும் அவர்களின் இரு குழந்தைகளான நியான்ஷ் (5), ஷான்விகா (3) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

சித்திபேட்டையில் இருந்து தங்கள் சொந்த ஊரான பலவந்தபூருக்கு காரில் திரும்பிச் சென்றபோது, வாகனத்தை ஓட்டிச் சென்ற ராஜ் காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.