20 குழந்தைகள் மரணம்…. நாடு முழுவதும் பரந்த அவசர உத்தரவு…. மத்திய அரசு எச்சரிக்கை….!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடைசி 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள் பதிவான நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

அதன்படி அனைத்து மூலப்பொருட்களையும் தயாரிக்கப்பட்ட மருந்துகளையும், முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெற்றோர்கள் மருந்து கடைகளில் மருந்து வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.