BREAKING: ஒரே துறையில் ரூ.634 கோடி… கே.என்.நேரு மீது ஊழல் வழக்கு… CM விஜய் அதிரடி… திமுகவுக்கு விழுந்த பலத்த அடி…!

By Nanthini on ஆனி 5, 2026

Spread the love

திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கே.என்.நேரு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை (ED) முன்னதாக கடிதம் எழுதியிருந்த நிலையில், அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் (HC) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த பிரம்மாண்ட ஊழல் வழக்கு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.