சிலிண்டர் எடை குறையுமா? – “கிடையவே கிடையாது” என திட்டவட்டமாக மறுத்த பெட்ரோலிய அமைச்சகம்… போலி செய்திகளுக்குச் சாட்டையடி..!!

By Soundarya on பங்குனி 24, 2026

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாகக் குறைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், சிலிண்டரின் எடையைக் குறைக்கும் திட்டம் அரசிடம் தற்போது ஏதும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாட்டில் போதிய அளவில் சமையல் எரிவாயு இருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வழக்கம் போல் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களே தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.