யாஷிகா – அஜித் மச்சான் ரிச்சர்ட்க்கும் திருமணம் எப்போது..? கேள்விக்கான விடை இந்த தேதியில் அறிவிக்கப்படுமாம்.. பிரபல இயக்குனர் சொன்ன தகவல்..

By admin on கார்த்திகை 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஷாலினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி பல படங்களில் நடித்தவர். தொடர்ந்து ஷாலினியாக வளர்ந்த பின் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அமர்க்களம் படத்தில் அஜீத்குமாருடன் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துகொண்டனர். ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ரிஷி. இவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக திரவுபதி, பரமபதம் விளையாட்டு, அந்தமான், பழைய வண்ணாரப்பேட்டை, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

 actress Yashika Anand

   

சமீபத்தில் ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். எந்த கேப்சனும் இல்லாமல் இருந்த அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். நீண்ட ஆண்டுகளாக ரிச்சர்ட் ரிஷி திருமணம் செய்யாமல் உள்ளதால் யாஷிகா ஆனந்துடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் பரவியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த புகைப்படங்களை அவர் பதிவிட்டதால், ரிச்சர்ட் ரிஷியின் நெருங்கிய நண்பரும், அவர் நடித்த திரவுபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜிக்கு பலரும் போன் செய்து கேட்டுள்ளனர்.

   

 actress Yashika Anand

 

இந்நிலையில், சில நொடிகளில் என்ற படத்தில் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. வரும் 24ம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மோகன் ஜி பேசுகையில், ரிச்சர்ட் ரிஷி முகநூலில் வெளியிட்ட அந்த புகைப்படங்கள் குறித்து, நானும் அவரிடம் அப்போதே போன் செய்து கேட்டேன். அப்போது சில நாட்கள் பொறுத்திடுங்கள் என்று சஸ்பென்ஸாக கூறினார். ஆனால், அதன் உண்மை இதுதான். இந்த படத்தில் நடிப்பதற்காக ரிச்சர்ட் – யாஷிகா எடுத்த பிரமோ புகைப்படங்கள்தான் அது. அதனால் படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் அவர் முகநூலில் பதிவிட்டு இருக்கிறார் என்றார். சில நொடிகளில் என்ற இந்த படத்தில் ரிச்சர்ட்டுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். அவரும் இந்த பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.