#Breaking: “வருந்துகிறேன்” நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷா மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய சர்ச்சை கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். 2026 பிப்ரவரி 14 அன்று, விஜய்யின் அரசியல் அனுபவம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் அரசியலில் அனுபவம் பெற “திரிஷாவின் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும்” என்று தனிப்பட்ட ரீதியில் விமர்சித்திருந்தார். இந்த கருத்தை “அநாகரீகமானது” என்று கண்டித்த நடிகை திரிஷா, “மரியாதையின்மை எப்போதும் தட்டிக்கேட்கப்பட வேண்டும்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, தனது வழக்கறிஞர் மூலம் கண்டன அறிக்கையும் வெளியிட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “யாரையும் புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை” என்றும், தனது பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும், தவறி வந்த வார்த்தை. அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.