இந்தியாவில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 204 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 1 லட்சத்து 79 ஆயிரத்து 535 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை, 60 லட்சத்து 19 ஆயிரத்து 723 கிலோமீட்டர் இதர சாலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் சாலையை சரியாக பராமரிப்பது இல்லை என காரணம் ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட 500 மீட்டர் தொலைவில் இரண்டாவது தடவையாக விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு 25 லட்சம் அபராதம் விதிக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை முடிவு எடுத்துள்ளது. இதே போல மறுஆண்டு மீண்டும் விபத்து பதிவானால் ஒப்பந்ததாரருக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை கட்டுமான பணிகளில் நிலை குறித்து ட்ரோன்கள் மூலமாக எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கூறியுள்ளது.
