“என்கிட்ட வச்சிக்காத, அடுத்த அமாவாசைக்குள் ரத்தம் கக்கி செத்துடுவ”… பில்லி, சூனியத்தால் வந்த வினை… திண்டிவனத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி சூனியம் இருப்பதாக நம்ப வைத்து கட்டுமான ஒப்பந்தர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த தனசேகர்(36) என்பவர் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திண்டிவனம் பல்லாக்குப்பம் பகுதியை சேர்ந்த கமல் பாஷா என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தனசேகரன் குடும்பத்தில் நேரம் சரியில்லை என்றும் பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகல் உள்ளது என்றும் கூறி பூஜை செய்வதாக கமல் பாஷா தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய தனசேகரனிடம் இருந்து அவர் உடுத்தும் துணிகள் மற்றும் நான்கு சவரன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கமால் பாஷா வாங்கியுள்ளார். நகை பணம் கொடுத்த பிறகும் தனசேகரனின் கஷ்டங்கள் தீராததால் அவர் கமல் பாஷாவிடம் நகையை திருப்பி கேட்டுள்ளார். இது குறித்த தனசேகரன் ஒரு வருடத்திற்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் தலையிட்டு பேசி இரண்டு சவரன் நகையை மட்டும் மீட்டு தந்தனர். மீதமுள்ள நகையை திருப்பி கேட்டபோது கமால் பாஷா, என்னிடம் வைத்துக் கொண்டால் அடுத்த அமாவாசைக்குள் ரத்தம் கக்கி சாகும்படி செய்து விடுவேன் என்று தனசேகரனை மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விரத்தி அடைந்த தனசேகரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தனசேகரன் மற்றும் கமல் பாஷா ஆகிய இருவரையும் நேற்று காலை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனசேகரனிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை அடுத்த 15 நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிடுவதாக கமால் பாஷா போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து கமால் பாஷாவை காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago