ஒரு காலத்தில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் எஃகு கோட்டையாக விளங்கிய அதிமுக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் சந்தித்த தேர்தல் தோல்விகளும், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களும் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி காரணமாக, அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் அக்கட்சியில் இணைந்து வருவது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டை என கருதப்பட்ட கொங்கு மற்றும் தென் மாவட்டங்களிலேயே கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவது தற்போதைய தலைமைக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் தோல்விகள் குறித்து எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் கும்பகோணப் பகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நிர்வாகி ஒருவர் இபிஎஸ்-இன் முகத்திற்கு நேராகவே பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒற்றைத் தலைமை முழக்கத்தால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என முக்கியத் தலைவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இப்போது கட்சி அலுவலகத்திலேயே தனக்கு எதிராக நிர்வாகிகள் குரல் எழுப்புவதை எடப்பாடி பழனிசாமியால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் நுழைய சசிகலா போட்ட ‘ஸ்கெட்ச்’? 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டால் அவர் சக்தி வாய்ந்த தலைவராக மாறிவிடுவார் என்பதால், அவரை வீழ்த்த சசிகலா தரப்பு மறைமுகமாகத் திட்டமிட்டதாக டெல்டா பகுதி அதிமுகவினர் முணுமுணுக்கின்றனர். பலவீனமான கூட்டணி, வேட்பாளர்களுக்கு எதிரான உள்ளடி வேலைகள் என அனைத்தும் இபிஎஸ்-ஐ வீழ்த்த சசிகலா வகுத்த வியூகம் என்றும், தற்போது தேர்தல் தோல்விக்குப் பிறகு “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்ற கோரிக்கையைத் தனது ஆதரவாளர்கள் மூலம் சசிகலா தீவிரப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மறுபுறம், சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வருவதற்கான ரகசிய வேலைகளும் சத்தமில்லாமல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. “அதிமுக ஒன்றிணையாவிட்டால் தோல்விதான் மிஞ்சும்” என சசிகலா ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி அவரது கை ஓங்குவதற்குக் காரணியாக அமைந்துள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கட்சிக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால், எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பான அரசியல் சூழல் தொற்றிக் கொண்டுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…