BREAKING: திருச்சி கிழக்கில் போட்டி…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்…..!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியதாகப் பகிரப்படும் இந்தத் தகவல், அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எந்தவொரு முக்கியப் பிரச்சினையிலும் கருத்து தெரிவிக்காமல் முதலமைச்சர் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், “எனக்கு பேசத் தெரியாமல் இல்லை, நான் பேசுவேன்; ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்ல வாய்ப்பு நடக்க வேண்டும் என்பதற்காகவே அமைதி காக்கிறேன்” என்று அவர் கோபத்துடன் பதிலளித்து அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய் அண்மையில் ராஜினாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், முதலமைச்சரின் இந்த அதிரடி பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.