விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த அப்டேட்கள் இணையத்தில் கசிய தொடங்கி இருக்கிறது. இன்னும் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் 4 வாரங்கல் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களில் முத்துக்குமாரனுக்கு அதிக வாக்குகளும், ராயன், ரஞ்சித் மற்றும் அன்ஷிதாவிற்கு குறைந்த வாக்குகளும் கிடைத்து வருகிறது. இதில் ரஞ்சித்தை ஃபேமிலி சுற்று வரை தக்க வைக்க வாய்ப்பு இருக்கலாம். ஏனெனில் அவருக்காக வெளியில் பேசி வரும் அவர் மனைவி பிரியா ராமன் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடியாக பேசி வரும் அவர் உள்ளே வந்து நிகழ்ச்சிக்கு சில கன்டென்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த வாரம் அன்ஷிதா அல்லது ராயன் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…