விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் புதுப்புது நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் தொடங்குவதை விஜய் டிவி வாடிக்கையாக கொண்டுள்ளது. அதன்படி விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கும் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைக்கும். அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே வெற்றி பெற்ற பலரும் தற்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக உள்ளனர். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சி மூலமாக கிடைத்த பிரபலத்தை வைத்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். அதில் சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனில் டைட்டில் வென்றவர் தான் அருணா.
அதுவரை எட்டு சீசன்களாக ஆண்கள் மட்டுமே சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆக இருந்த நிலையில் ஒன்பதாவது சீசனில் தான் ஒரு பெண் போட்டியாளராக அருணா வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்து சுமார் ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அருணா, நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தந்த வீட்டுக்கு இன்னும் போகவில்லை. பொதுவாக பெரிய மனசு பண்ணி ஒரு தங்க கிஃப்ட் தராங்க. அதற்கும் சில வரிகள் கட்ட வேண்டி உள்ளது. எனக்கு சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதற்காக 50 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள ஒரு வீடு கொடுத்தாங்க.
அதற்கு நாங்கள் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டியிருந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையால் என்னால் அந்த பணத்தை முழுமையாக கட்ட முடியாது. அதனால் இப்போ வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா தான் கட்டிக்கிட்டு இருக்கும். விரைவில் மொத்த பணத்தையும் கட்டி முடித்துவிட்டு அந்த வீட்டுக்கு நாங்க போயிடுவோம். பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கட்டுகிறோம் என்று பர்மிஷன் வாங்கியுள்ளோம் என்று அருணா பேசியுள்ளார். மேலும் சுமார் 60 லட்சம் மதிப்புள்ள அந்த வீட்டுக்கு 15 லட்சத்திற்கு மேலாக வரி கட்ட வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…