உத்திரபிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் மின் அதிகாரிகளிடம் சென்று, “பதில் சொல்லுங்க அதிகாரி… என் வீட்டுக் கரண்ட் பில் 800-லிருந்து 1200 ரூபாய்தான் வரும்.. இப்போ திடீர்னு எப்படி 3000, 4000-னு எகிறியது? நீங்கதானே ஸ்மார்ட் மீட்டர் அதிகாரி.. பதில் சொல்லுங்க என்று கேட்ட பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. நுகர்வோரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“मुझे जवाब दीजिए…”मेरे मीटर में 800 से 1200 रुपए बिल आता था..”अचानक से 3000-4000 कैसे आने लगा…?
आप स्मार्ट मीटर के अधिकारी हैं..आप ही बताइए..जवाब दीजिए…!
विद्युत चौपाल में बवाल हो गया…उपभोक्ता के बिजली बिल बढ़ोतरी के सवालों पर जवाब देने के बजाए मुंह छिपाते भागते दिखे… pic.twitter.com/koAr9HK3br
— Rahul Saini (@JtrahulSaini) April 28, 2026
மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. பழைய மீட்டர்களை விட ஸ்மார்ட் மீட்டர்கள் மிக வேகமாக ஓடுவதாகவும், கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் இந்தத் திட்டத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்து போயுள்ள நிலையில், நீங்களும் மின்சாரத் துறையின் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்ற கேள்வி இப்போது மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது.
