மாணவி செய்த காரீயம்..! மேடையில் ராகுல் காந்திக்கு திடீர் முத்தம்… கொதித்தெழுந்த பாஜக… காங்கிரஸ் அனல் பறக்கும் பதிலடி…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’ என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மேடையில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாக ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எந்தவித தயக்கமும் இன்றி ஒரு பெண் அவரிடம் இவ்வளவு சுதந்திரமாகப் பழகுவது, அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் பாதுகாப்பான உணர்வையும் காட்டுவதாக இணையவாசிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘மனுஸ்மிருதி’ சிந்தனைகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், ஆணாதிக்கத்தை உடைத்தெறிய வேண்டும் என்று பெண்களை வலியுறுத்தினார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சும், நிகழ்ச்சியும் மகாராஷ்டிர அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் வார்த்தைப்போரை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ‘அரசியல் நகைச்சுவை நாடகம்’ என்றும், கூட்டத்தைக் காட்ட மாணவர்களைப் பேருந்துகளில் அழைத்து வந்ததாகவும் பாஜக விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பைப் பார்த்து பாஜக கலக்கமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.