BREAKING: காங்கிரஸ் – தவெக கூட்டணி..? முடிவை சொன்னார் விஜய்…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love
2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கலாம் எனப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது விஜய் எடுத்துள்ள இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் கட்சியின் உண்மையான பலம் மற்றும் வாக்குச் சதவீதத்தை நிரூபிக்க முடியும் என்றும், அதன் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விரைவாகப் பெற முடியும் என்றும் விஜய் கருதுவதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்ட வாரியான முக்கிய நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தவும், வேட்பாளர் தேர்வுக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவும் விஜய் அறிவுறுத்தியுள்ளாராம். 234 தொகுதிகளிலும் வலுவான மற்றும் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாகத் தவெக-வை முன்னிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார். விஜய்யின் இந்தத் “தனி வழி” வியூகம், வரவிருக்கும் தேர்தலில் பலமுனைப் போட்டியை உறுதி செய்வதோடு, வாக்கு வங்கியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.