தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டே திமுக இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்பது என கே எஸ் அழகிரி கூறியதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது மறைமுகமாக தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் செல்வதற்கான சிக்னலாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க இருக்க இது போன்ற கருத்துக்கள் வலுவடையும் என்றும் விஜய் உடன் காங்கிரஸ் நெருக்கமாக இருப்பதால் கடைசி நேரத்தில் கூட காங்கிரஸ் TVk பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
