தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டே இந்த முறையும் தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமகன் ஈவெரா., EVkS இளங்கோவன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த தொகுதியை திமுக தன் வசப்படுத்தியது. இந்நிலையில் இந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க மூத்த தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் இது திமுகவுக்கு புதிய சிக்கலாக மாறியுள்ளது.
