காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்…. திமுக கூட்டணியில் திடீர் மாற்றம்.. தமிழக அரசியலில் அடுத்த ‘திடுக்கிடும்’ திருப்பம்…!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

தமிழக அரசியலில் ராஜ்ய சபா தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி, கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய 4 இடங்களில் ஒன்றைப் பெறுவதில் காங்கிரஸ் பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, “ராஜ்ய சபா சீட் தேவையா இல்லையா?” என்பதை இன்று மாலைக்குள் இறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸுக்கு அதிரடியாக கெடு விதித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் மேலிடம் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தவெக-காங்கிரஸ் இடையிலான இந்த நெருக்கம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் திமுகவின் கெடு, மறுபுறம் புதிய கூட்டணியின் சாத்தியக்கூறுகள் என காங்கிரஸ் எடுக்கும் முடிவு தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது.