டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயின் மர்ம நபரால் பறிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது எம்.பி சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பைக்கில் வந்த மர்ம நபர் செயினை பறித்து தப்பி ஓடியதாக சாணக்கியுரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
