ஜோதிமணி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட இளைஞர்… மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகி… பரபரப்பை கிளப்பும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு இடத்தில் மக்களை சந்திக்க சென்றார். அவர் காரை விட்டு இறங்கியவுடன் இளைஞர் ஒருவர் ஜோதிமணி பக்கம் நோக்கி நடந்து சென்று ஏதோ கேட்க முயன்ற போது அவருடன் இருந்த ஒருவர் அந்த இளைஞரை அந்தப் பக்கம் போடா என்று ஆவேசமாக தள்ளிவிட்டார். அதற்கு அந்த வாலிபர் என்னை அடித்து விடுவீர்களா என்று எதிர்த்து நின்றதால் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அந்த நபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தன்னுடைய தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்கும்போது அவரை எதற்கு மிரட்ட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்று அரசியல் பேச்சுகளுக்கு அப்பால், என்னென்ன உறுதியான பங்களிப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று தனது தொகுதியை நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமையும் உள்ளது. இத்தகைய ஒரு அடிப்படை ஜனநாயக கேள்வி ஏன் மிரட்டலுக்கு வழிவகுக்க வேண்டும்.

   

இந்த கேள்வியை கரூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் உரியது கிடையாது. கடந்த ஆறு வருடங்களாக இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். கேள்விகளுக்கு உண்மைகளுக்கு பதிலாக முஷ்டிகளாலும் மிரட்டலாலும் பதிலளிக்கப்படும்போது அது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.