கை நழுவும் கூட்டணி..? 2 மாதங்களாக பதிலளிக்காத ஸ்டாலின்.. பொறுமை இழந்த காங்கிரஸ்… அறிவாலயத்தின் மௌனத்தால் அதிருப்தி..!!

By Soundarya on தை 28, 2026

Spread the love

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் ஷோடங்கர், திமுக தலைமை மீது பகிரங்கமான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக இதுவரை தொடங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, டிசம்பர் 13-க்குள் கூட்டணி குறித்த இறுதி முடிவை எட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இரண்டு மாதங்களாக திமுக தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

திமுகவின் இந்த மௌனம் மற்றும் காலதாமதத்திற்கான காரணம் புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஷோடங்கர், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் இந்த பகிரங்கப் புகார், திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.