சிக்னல் கொடுத்த காங்கிரஸ்… தவெகவுடன் கூட்டணி..? 2006-லேயே ஸ்கெட்ச் போட்ட விஜய்… உண்மையை உடைத்த பிரபலம்..!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

2016 சட்டமன்றத் தேர்தலில் வென்று புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய உள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், TNCC பேரவை குழு தலைவர் ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “2006-ம் ஆண்டிலேயே விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். மேலும், அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். இது, 2026-ல் கூட்டணி மாற்றத்திற்கு காங்கிரஸ் தயாராவதற்கான சமிக்ஞை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.