இரவோடு இரவாக அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. எடப்பாடி இறக்கிய மாஸ் ‘செக்மேட்’ அஸ்திரம்…. அலறும் தென் மாவட்டம்….!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் பிற கட்சிகளுக்கு மாறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் புதிய அரசியல் வியூகங்களை அமைத்துத் தன் பலத்தைக் காட்டி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெகன்ராஜ், மேல்புறம் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தானியேல் சிபின் மற்றும் விளவங்கோடு தொகுதி மாணவர் காங்கிரஸ் செயலாளர் அபிஜித் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், காங்கிரஸிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். தென் மண்டலத்தில் அதிமுகவை மீண்டும் பலப்படுத்தி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருவதையே இச்சேர்க்கை தெளிவாக உணர்த்துகிறது.