தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய பி.டி.செல்வம் தவெக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். மார்ச் 25-ம் தேதி காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செல்வம், அடுத்த நாளே விஜய்யைச் சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், தற்போது நட்சத்திரத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிதான். ஆளுங்கட்சியின் முக்கிய முகமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஆதிராஜாராம் ஆகியோரை எதிர்த்து, தேர்தல் அரசியலில் அனுபவம் வாய்ந்த டி.செல்வத்தை விஜய் நிறுத்தியிருப்பது அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டியை மிகத்தீவிரமாக்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் அறிவிப்பில் பம்பரமாகச் சுழன்று வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் தவெக எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பி.டி.செல்வம், கட்சியில் இணைந்த மூன்றே நாட்களில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தவெக தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடும் நிலையில், முக்கியமான தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தனது அரசியல் வருகையை விஜய் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…