மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது படை பலத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ கப்பலில் இருந்து 3,500 கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கு வந்தடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏற்கனவே அங்குள்ள 50,000 வீரர்களுடன் இந்த புதிய படையும் இணைந்துள்ளது, போர் மேகங்களை மேலும் கருமையாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி படை குவிப்பு, ஈரானுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான முன்னோட்டமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை முடிக்க விரும்புவதாக அதிபர் ட்ரம்ப் கூறிவந்தாலும், தரைப்படை வீரர்களின் வருகை வேறு ஒரு திட்டத்தை உணர்த்துகிறது. வான்வழித் தாக்குதல்களால் ஏற்படும் அதீத பொருளாதாரச் செலவுகளைக் குறைக்கவே அமெரிக்கா தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் மிகவும் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் ‘தெஹ்ரான் டைம்ஸ்’ நாளிதழ் தனது முதல் பக்கத்தில் “நரகத்திற்கு நல்வரவு” (Welcome to Hell) என்ற தலைப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய மண்ணில் கால் பதிக்கும் எந்தவொரு அமெரிக்க வீரரும் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள் என்று அந்த நாடு பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
மறுபுறம், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளுக்குப் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளார். “எதிரிகள் உங்கள் நிலத்தைப் பயன்படுத்திப் போர் புரிய அனுமதிக்காதீர்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் தொடர் பதற்றத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…