“ஆட்சியில் பங்கில்லை” திமுக திட்டவட்டம்… “2006-ல் நாங்க விட்டது தப்பு” கொதிக்கும் எம்பி மாணிக்கம் தாகூர்… தமிழக அரசியலில் வெடிக்கும் ‘பவர் ஷேரிங்’ போர்..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக – காங்கிரஸ் இடையில் “ஆட்சியில் பங்கு” குறித்த விவாதம் தற்பொழுது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  2026 தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராத ஒன்று” எனத் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம் கோரி வரும் நிலையில், முதல்வர் இதனை நிராகரித்துள்ளார்.

முதல்வரின் கருத்துக்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என்று கூறியுள்ளார். மேலும், 2006-ல் மக்கள் அளித்த தீர்ப்பை (கூட்டணி ஆட்சி) செயல்படுத்தாதது காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார். 2006-ல் திமுக 96 இடங்களை மட்டுமே வென்ற போதும், காங்கிரஸ் (34), பாமக (18) போன்ற கட்சிகளின் வெளி ஆதரவுடன் ‘மைனாரிட்டி’ அரசாக ஆட்சி நடத்தியது. அப்பொழுதே காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டிருக்க வேண்டும் என்பதே மாணிக்கம் தாகூரின் தற்போதைய வாதமாகும்.