தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்கப் போகிறோம் என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது. அகில இந்திய தலைமையிடம் என்ன வலியுறுத்த வேண்டுமோ அதை வலியுறுத்துவோம். கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் அவரவர் விருப்பத்தை கூறி வருகிறார்கள். அது குறித்து காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டுதலை தமிழ்நாடு காங்கிரஸ் இயர்க்கும்.
இந்த நிமிடம் வரை நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஐந்து வெற்றி தேர்தல்களை சந்தித்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் பிரச்சனைக்கு நாங்கள் தான் முதலில் வாய் திறக்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம். ஆணவ படுகொலைக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மக்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது என்ற செல்வ பெருந்தகை கூறியுள்ளார். இதனிடையே செல்வப் பெருந்தகை கூட்டணி ஆட்சி குறித்து பேசி உள்ளது தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
