“காங்கிரஸ் தலைவர் கார்கே தங்கிய இடத்தை கங்கை நீரால் தூய்மைப்படுத்திய விவகாரம்…” பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, அந்த இடம் கங்காஜலத்தால் கழுவி ‘தூய்மைப்படுத்தப்பட்டதாக’க் குற்றச்சாட்டு எழுந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவரை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் காங்கிரஸார் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டனர்.

கல்யாண் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜப்ஜித் சிங் மாதா மற்றும் மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி காஞ்சன் குல்கர்னி தலைமையில், சிவாஜி சௌக் பகுதியில் இருந்து திலக் சௌக்கில் உள்ள பா.ஜ.க அலுவலகம் நோக்கிப் பேரணியாகப் புறப்படத் தயாராயினர். ஆனால், அங்கு விரைந்து வந்த கல்யாண் நகர்ப் போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

போலீசாரின் இந்தத் தடையை மீறிச் செல்ல முயன்றதால் காங்கிரஸாருக்கும் போலீசாருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்துப் போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகளையும் தொண்டர்களையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ஜனநாயக முறையில் போராட முயன்றவர்களைக் கைது செய்து ஒடுக்கப் பார்ப்பதாகக் காங்கிரஸ் தலைவர்கள் போலீசாரைக் கடுமையாகச் சாடியுள்ளனர். பின்னர் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்ட போதிலும் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

Devi Ramu

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

25 minutes ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

40 minutes ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

1 மணத்தியாலம் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

1 மணத்தியாலம் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago