2026 தேர்தல் கூட்டணி… விஜய்க்கு செம ஷாக்… சற்றுமுன் காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடலை தொடங்குவதற்காக காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்துள்ளார். இந்தக் குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் செயலாளர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ ஆகியோர் உள்ளனர்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் அரசியல் புறசலாக அவபோது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.