ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக திரையில் வரப் போவது அவரா… இவரா…? – ரஜினி ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் குழப்பம்!

By Elango on மார்கழி 17, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் படங்களை பொருத்த வரை ஆக்சன் கதைக்களத்தில் உருவான படங்கள் என்றால் வெயிட் ஆன வில்லன் கண்டிப்பாக இருந்தால்தான் படம் ஓடும். அதனால் பல படங்களில் ரஜினிக்கு சரியான வில்லன் ரகுவரன்தான். அதன்பிறகு ரஜினிக்கு பல நடிகர்கள் வில்லனாக நடித்து வருகின்றனர். எனினும் ரகுவரன் அளவுக்கு அவருக்கு டப் ஆன வில்லனாக யாரும் இருப்பதில்லை. அதனால் படத்துக்கு படம் வில்லன் மாறிக்கொண்டே இருக்கிறார்.

இதற்கிடையே ஜெயிலர் படத்தில் வில்லனாக வந்த மலையாள நடிகர் விநாயகன் நடிப்பில் மிரட்டியிருந்தார். ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸில் அவர் இறந்து விடுவார். இப்போது ஜெயிலர் 2 படம் உருவாகிய நிலையில் இந்த மாத இறுதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இந்த படத்தில் முதலில் வில்லன் எஸ்ஜே சூர்யா என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன் என்ற லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. இதனால் உண்மையில் ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் என்பதில் ரஜினி ரசிகர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது.