டிரம்ப் கொடுத்த வார்னிங்…! ஐரோப்பா எடுத்த திடீர் முடிவால் முறியும் வர்த்தக ஒப்பதந்தம்…? கிரீன்லாந்து விவகாரத்தால் வெடிக்கும் மோதல்…!!

By Devi Ramu on தை 18, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து பகுதியைத் தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார். இதற்குத் தடை விதிக்கும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய தேசங்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், கிரீன்லாந்தை விற்கும் வரை இந்த வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் மீண்டும் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.

டிரம்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகிறது. கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க்கிற்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்கப் பொருட்களுக்கான தளர்வுகளை நீக்கி மீண்டும் வர்த்தகப் போரைத் தொடங்கத் தயாராகி வருகின்றனர். இந்த இரு தரப்பு மோதலால் உலகளாவிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கை மிகுந்த கவலையுடன் கவனித்து வருகின்றனர்.