பகிரங்கம்மா மன்னிப்பு கேளுங்க…! பெண் டாக்டரின் ஹிஜாப்பை இழுத்த விவகாரம்…. கொந்தளித்த அமைப்புகள்….!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

பீகார் தலைநகர் பாட்னாவில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாபை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பலவந்தமாக விலக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் இந்த நிகழ்ச்சியில், மேடையேறிய பெண்ணின் அனுமதியின்றி முதல்வர் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்டது சர்ச்சையாகியுள்ளது. இந்தச் செயலை அங்கிருந்தவர்கள் வேடிக்கையாகப் பார்த்த நிலையில், இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

   

காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமாரின் இந்தப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் முதல்வரின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

   

ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும் மத நம்பிக்கைகளுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக நிதிஷ் குமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மத உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஒரு உயர்பதவியில் இருப்பவரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.