BIG BREAKING: அமைச்சரின் இந்த வெற்றி செல்லாது… அதிர்ச்சியில் தவெக..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் (ECI), தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் (RO) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சபின் கடிதம் எழுதியுள்ளார். இத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்துதான் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளதாகத் தவெக வேட்பாளர் சபின் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடுமையான தேர்தல் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெறும் 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தவெக-வின் சபினைத் தோற்கடித்துத் தனது வெற்றி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சபின் தனது வெற்றியை இழந்ததால், தபால் வாக்கு எண்ணிக்கையில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மறுவாக்கு எண்ணிக்கை அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக தரப்பில் தற்பொழுது இந்த அதிரடிப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.