“திமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றது உண்மை”….. அமைச்சர் வெளிப்படை வாக்குமூலம்… DVAC போட்ட அதிரடி ஸ்கெட்ச்… சிக்கிய மரிய வில்சன்….!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உரையை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தானே சாட்சி” என அவர் சட்டப்பேரவையில் பேசிய பேச்சுக்கள் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரியார் இந்த மனுவை அளித்துள்ளார்.

அரசில் இடம்பெற்றுள்ள முக்கிய நிர்வாகி ஒருவரின் பேச்சையே ஆதாரமாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.