“பிரேமலதா வெளியிட்டது விஜயகாந்தின் பழைய புகைப்படங்கள்”.. பகீர் கிளப்பும் பயில்வான்..

By Sumathi

Updated on:

மிகவும் உடல் நலம் பாதித்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த சில வாரங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகர் விஜயகாந்த். ஐசியு சிகிச்சை பிரிவில், அவருக்கு தொண்டை குழியில் 3 துளைகள் போடப்பட்டு அதன் வழியாக செயற்கை சுவாசக்காற்று அளிக்கப்பட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது. நுரையீரலில் கிருமித்தொற்று அதிகமாக உள்ளதால், சுவாசிக்கவே முடியாத சூழலில் அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று முன்தினம் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, கேப்டன் நன்றாக இருக்கிறார். வதந்திகளை பரப்ப வேண்டாம் என வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார்.

Vijayakanth

   

இந்நிலையில், பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் இன்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, விஜயகாந்தின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், தெலுங்கில் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. தமிழை தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடிக்கவில்லை. அப்படிப்பட்ட சிறந்த மனிதர், இன்று மருத்துவமனையில் இருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் அதே வேளையில் விஜயகாந்த் ரசிகர்களை சாந்தப்படுத்தவும், தேமுதிக தொண்டர்களை ஆறுதல்படுத்தவும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை வெளியிட்டு, விஜயகாந்த் நலமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Vijayakanth

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா மற்றும் டாக்டர்களை தவிர வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அதுபோல, பிரேமலதா குடும்பம், டாக்டர்களைத் தவிர, வேறு யாரும் விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்கவில்லை. விஜயகாந்த் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி விஜயகாந்தை பார்க்க சென்ற போது, மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை. கேட்டால், தொற்று வந்துவிடும் என்று கூறியிருக்கின்றனர்.

Vijayakanth

அப்புறம் எப்படி, தொற்று பரவும் நிலையில் உள்ளவரை இப்படி புகைப்படங்கள் எடுக்க முடியும்? மருத்துவமனையில் ஆபத்தான சிகிச்சையில் உள்ளவரை புகைப்படம் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது. கேமராவில் இருந்து வெளிப்படும் எக்ஸ்ரே கதிர்கள், விஜயகாந்தை பாதிக்காதா. அதனால்தான் ஜெயலலிதா, கருணாநிதி படங்களை கூட சிகிச்சையின் போது எடுத்து வெளியிடவில்லை. பிரேமலதா வெளியிட்ட புகைப்படங்கள். ஒரு மாதத்துக்கு முன்போ, அல்லது எப்போதோ எடுக்கப்பட்டதுதான் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi