தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் அதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்துள்ளன. இத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகளான சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். ஆகியவை தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போதுள்ள அரசியல் சூழலில், விஜய் தரப்பிலிருந்து முறையான அழைப்பு வரும் பட்சத்தில், கம்யூனிஸ்டு கட்சிகள் தங்களது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கத் தயாராக உள்ளன.ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த ஆலோசனைகள் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை வழங்க கூட்டணிக் கணக்குகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன
