மதுரையில் “நாட்டை காப்போம்” அமைப்பு சார்பாக சாரி மாணவ படுகொலைகளை தடுப்பது தொடர்பாக கருதரங்கம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசினார். அப்போது,” மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களை சாதிய கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வழக்கு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுப்பதில் போலீசார், அரசு அதிகாரிகள், அலுவலர்களின் அணுகுமுறை மாற வேண்டும்.
எந்த மதமாகவும் ஜாதியாகவும் இருந்தாலும் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சட்டப்படி திருமணங்கள் செய்து வைக்கப்படும். எங்களை பார்த்து காதல் திருமணம் செய்ய விரும்புவோர் பாஜக அலுவலகம் வரலாம் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். எனவே காதலர்கள் யாரும் அண்ணாமலை பேச்சை கேட்டு பாஜக அலுவலகத்திற்கு சென்று விடாதீர்கள். அவர்கள் சாதி மதிப்பு திருமணத்திற்கு எதிரானவர்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக அண்ணாமலை இப்படி சொல்லி இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
