BREAKING: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக?…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பல பாகங்களாக உடைந்து கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. இதனிடையே மீண்டும் அதிமுக ஆட்சி மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார். ஆட்சி அமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுக தான் ஒரே தீர்வு என்று கூறிய அவர், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலை அசுர பலத்துடன் சந்திப்போம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே இந்த கருத்தை ஓபிஎஸ் முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.