மும்பையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் கிரியேட்டரான சாஹில் குப்தா, தனது இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் பிரபல கால்பந்து நட்சத்திரமான எர்லிங் ஹாலாண்ட் கமெண்ட் செய்தால், அடுத்த மூன்று மாதங்களில் 20 கிலோ எடையைக் குறைப்பதாக ஒரு சவாலை விடுத்திருந்தார். ஹாலாண்டின் உருவப் பொம்மையுடன் (life-sized cutout) அவர் பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், யாருமே எதிர்பாராத விதமாக நோர்வே நாட்டின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலாண்ட் “Starting now.” (இப்போதே தொடங்குங்கள்) என்று அந்த வீடியோவில் கமெண்ட் செய்தார். சாஹிலின் இந்த யோசனையும், அதற்கு ஹாலாண்ட் அளித்த இந்த இரண்டு வார்த்தை பதிலும் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீ போல் பரவி வைரலாகியுள்ளது.
https://www.instagram.com/reel/DbA1ojFsyd0/?utm_source=ig_embed&ig_rid=AevxcOv_L7j-4BYvdzwZWiY
கால்பந்து ரசிகரின் இந்த ஜாலியான கோரிக்கைக்கு விளையாட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் ஒருவர் நேரடியாகப் பதிலளித்தது பலரையும் ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் சாஹில் குப்தாவுக்கு மிகப்பெரிய பொறுப்பையும், எடையைக் குறைப்பதற்கான வலுவான ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. இணையவாசிகளில் சிலர், “உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு மற்றவர்களின் தூண்டுதலை விட சுய உந்துதலே அவசியம்” என்று கருத்து தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் விளையாட்டு நட்சத்திரங்களின் இதுபோன்ற சிறிய சைகைகள் கூட தனிநபர்களின் வாழ்க்கையில் பெரிய நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பாராட்டி வருகின்றனர். எது எப்படியோ, இப்போது ஒட்டுமொத்த இணையத்தின் பார்வையும் சாஹிலின் 3 மாத உடற்பயிற்சி பயணத்தின் மீது திரும்பியுள்ளது.
