எங்களை குடும்பத்தினர் பிரிக்க பார்க்கிறார்கள் என்று அங்கு பணியில் இருந்த காவலரிடம் அந்த ஜோடி கூறி உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்த இளம் பெண்ணை பெற்றோரும் மற்றொரு தரப்பினரும் தேடி வந்துள்ளனர். அங்கு வந்த 30 வயது வாலிபர் அந்த பெண்ணுக்கு நான்தான் முறைப்படி தாலி கட்டிய முதல் கணவர் என்று கூறி போலீசாரை அதிர வைத்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் முதல் கணவரிடமும் அந்த இளம் பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். அதில் ஓமலூர் அருகே கொங்கு பட்டி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் சின்ன திருப்பதியில் துணிக்கடை நடத்தி வருகின்றார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவரின் கடைக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள மற்றொரு துணி கடைக்கு அந்த இளம் பெண் வேலைக்கு சென்ற நிலையில் சிமென்ட் விற்பனை கடையில் வேலை செய்து வந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னுடைய கள்ளக்காதலனான வாலிபருடன் கடந்த வாரம் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு ஓட்டம் பிடித்துள்ளார். அங்கு இருவரும் கோவிலில் தாலி கட்டிக் கொண்டு தற்போது காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது தெரிய வந்தது.
பிறகு முறைப்படி தாலி கட்டிய முதல் கணவருடன் போகுமாறு போலீஸ் அறிவுறுத்திய நிலையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலுடன் தான் செல்வேன் என்று கூறி அடம்பிடித்து உள்ளார். அதற்கு சட்டத்தில் முறைப்படி இடமில்லை என்றும் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள முடியாது, ஒன்று கணவருடன் செல்லுங்கள் அல்லது பெற்றோருடன் செல்லுங்கள் என்று இளம் பெண்ணிடம் போலீசார் தெரிவித்தனர். பிறகு வேண்டா வெறுப்பாக அந்த இளம் பெண் தன்னுடைய பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சினிமா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
